கோ திரைப்படம் வெளிவந்தபோது எழுத்தாளர் சுபாவைப் பற்றி சிறுகட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். சுபாவின் எழுத்துநடையின் சிறப்பம்சம், அதில் மிளிரும் பன்முக அறிவு, வெகுஜனங்களை கவரும் திறன் ஆகியவற்றை அதில் குறிப்பிட்டு இருந்தேன். அவற்றின் ஊடே என் அனுபவமும் ஒன்றிருந்தது.
கட்டுரையின் நிறைவில் ' கதைப்பஞ்சத்தில் வாடும் தமிழ் திரையுலகிற்கு சுபாவின் வருகை வரவேற்கத்தக்கது என்றும், எழுத்துலக பிதாமகன் சுஜாதாவின் இடத்திற்கு சுபா நிச்சயம் தகுதியானவர்தான் ' என்றும் கூறி முடித்திருந்தேன். அந்த கட்டுரை பலரும் படித்திருப்பார்கள். ஆனால் ஒருவர்கூட கமென்ட் போடவில்லை, ஒரு வார்த்தை கூட அதுகுறித்து பேசவில்லை என்பதில் எனக்கு சிறிதும் வருத்தமில்லை என்று நான் பொய் சொல்லமாட்டேன். கொஞ்சம் வருத்தம்தான்.
ஆனால் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சுஜாதாவின் இடத்தை நிரப்பும் விதமாக, இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்திற்கு எழுத்தாளர் சுபாவை (கதை,திரைக்கதை,வசனம்?) அழைத்திருக்கிறார். என்னுடைய கணிப்பு சரியானது என்று பெருமைப்பட்டுக் கொள்வதைவிட , ஒரு நல்ல ரசிகனாக என் ஆசை நிறைவேறியது என்பதே சரி.
சுரேஷ் - பாலா என்ற இரண்டு நபர்கள் சேர்ந்துதான் எழுத்தாளர்கள் சுபா. முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில், விறுவிறுப்பான திரைக்கதை, எதிர்பாராமல் திகைக்கவைக்கும் அடுத்தடுத்து வரும் வசனங்கள் , ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் அறிவியல் மேதாவித்தனம், (கொஞ்சம் அதிகமாகவே) நெருங்கிப்பழகும் ஹீரோ-ஹீரோயின் - என ஒரு Complete Entertainer ஆக அமைவதுதான் சுபாவின் திரைப்படங்கள் ( கனா கண்டேன், அயன் , கோ). சுபாவைப்பற்றிய எனது முந்தைய கட்டுரையை படிக்க விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட சங்கிலியை பிடித்துக் கொள்ளலாம்.
வழி மேல் விழி வைத்து...
ReplyDeleteநன்று... எழுத்து font டை கொஞ்சம் கூட்டி விடுங்கள்..
ReplyDelete