ஒரு வருடத்திற்கு முன்பு Inception என்றொரு ஆங்கிலப் படம் வெளிவந்தது. உயிர்மை பத்திரிகையில் சாரு நிவேதிதா Inception- ஐ குடலாப்பரேஷன் பண்ணியிருந்தார். பயந்து போய் அதை படிக்கவே இல்லை. கடந்த புத்தாண்டு தினத்தில் HBO சேனலில் அத்திரைப்படத்தை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. படம் முடியும்போது அசந்து, சோர்ந்து விட்டேன். இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் பொளந்து கட்டியிருக்கிறார். இன்செப்ஷன் திரைப்படம் ஒரு குழப்பமான, சிக்கலான, ஆர்வத்தை தூண்டும் ஒரு விறுவிறுப்பான திரைக்கதையாகும். திரைக்கதையை உருவாக்குவதற்கே நோலன் பல மாதங்கள் உழைத்திருக்கிறார். மூன்று தடவை பார்த்த பிறகுதான் கதை முழுதாக புரிந்தது ( அப்படித்தான் நினைக்கிறேன்). ஆனால் முதன்முறையிலேயே படத்தின் Bottom line புரிந்துவிட்டது. ஓரளவு உளவியல் கற்றவர்களுக்கும், ஆன்மீக அறிவு பெற்றவர்களுக்கும் புரியக்கூடிய கதைதான். ஆதாரமாக பார்த்தால், இன்செப்ஷன் ஒரு Psychology based மூவிதான். பார்வையாளர்களுக்கு ஒரு சவால் போன்றே இப்படம் தெரிகிறது. ஈர்ப்புடன் கூடிய சுவாரசியமான சவால்.
படத்தின் முழுக்கதையை இங்கு நான் கூறவில்லை. கதையை பற்றி சில குறிப்புகள் மட்டும் கொடுத்து விட்டு, அதோடு தொடர்புடைய சில உளவியல் சங்கதிகளை மட்டும் எழுதி விட்டு விலகிக்கொள்கிறேன். படத்தின் கதாநாயகன் காப் (லியோ, டைட்டானிக்) ஒரு திருடன். இதயத்திருடன் அல்ல. உள்ளத் திருடன். ஒருவர் தூங்கும்போது அவரது நடுமனதிற்குள் (Sub-conscious mind ) புகுந்து , அந்த தளத்தில் சம்பந்தப்பட்ட நபரோடு கனவுத்தோற்றங்களை உருவாக்கி, நிஜம்போலவே நம்ப வைத்து, அவரது மனதில் பதிந்துள்ள ரகசியங்களை கண்டறிந்து, பிறகு அப்படியே வெளியே வந்துவிடும் ஓர் அபூர்வ கலையில் வல்லவர். இக்கலையை காப் பாரீசில் ஒரு குருவிடமிருந்து கற்றுக்கொண்டு மேன்மேலும் தேர்ச்சி பெற்றுவிடுகிறார். இந்நிலையில் ஒரு பெரிய பிசினஸ் மேன் காப்பிற்கு மிகவும் ரிஸ்க்கான அசைன்மெண்டை தருகிறார். இழந்த தன்னுடைய குழந்தைகளை மீட்க காப் அதை ஏற்றுக்கொள்கிறார். அதாகப்பட்டதாவது , ஒருவரின் மனதில் அவருக்கே தெரியாமல் நுழைந்து குறிப்பிட்ட ஒரு எண்ணத்தை விதைத்துவிட (Inception) வேண்டும். அது சுலபமான காரியமல்ல. ஏனெனில் ஒருவரின் உள்ளுணர்வு ஒரு அயல் உணர்வை எளிதில் அடையாளம் கண்டு அதை தடுத்து நிறுத்த முயலும். எனவே உள்ளுணர்விற்கு டேக்கா கொடுத்துவிட்டு, குறிப்பிட்ட ஒரு எண்ணத்தை சம்பந்தப்பட்ட நபரின் சொந்த எண்ணம் போலவே தோன்ற செய்ய வேண்டும். அப்படி செய்துவிட்டால் விதைக்கப்பட்ட எண்ணம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து உடலையும் மனதையும் முற்றாக ஆக்ரமிக்கும். கடினமான இக்காரியத்தில் காப் சில கூட்டாளிகளுடன் (ஒரு சிறிய பெண்) இறங்குகிறான். துளி கூட கதையில் ஆபாசமில்லை. இதுதான் கதை என்று நான் சொன்னால் அது தவறு. படத்தை பொறுமையாக முழுமையாக பாருங்கள், புரியும். முதல் தடவை தமிழ் டப்பிங்கில் பார்ப்பது உத்தமம்.
மனித மனதின் சில ' சாதாரண ரகசியங்களை ' இந்நேரத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது இன்செப்ஷன் திரைப்படத்தை எளிதில் புரிந்து கொள்ள உதவும்.
ஒவ்வொரு மனிதனின் மனமும் பேராற்றல் வாய்ந்தது என நண்பர்கள் யாரிடமாவது கூறினால் கொட்டாவி விடுகிறார்கள். உண்மையில் மனித மனமானது புனிதமான, களங்கமற்ற, எங்கும் ஊடுருவும் ஒரு பாய்மப் பொருளாகும். எந்த நேரத்திலும் எந்த வடிவத்தையும் எடுக்கக்கூடிய காந்த அலையே மனித மனமாகும். கண்ணாடியில் அழுக்கு சேருவதை போல, களங்கமான எண்ணங்களால் மனமானது தன் உண்மை தன்மையை தானே மறைத்துக்கொள்கிறது.
மனதின் வியத்தகு இயல்புகளில் ஒன்று கனவுகளாகும். ஒவ்வொருவரின் மனதிலும் உத்தேசமாக ஐந்து கோடி எண்ணங்கள் இருக்கலாம் என்கிறார்கள். மனதில் நல்ல எண்ணங்களும் இருக்கலாம், தீய எண்ணங்களும் இருக்கலாம். தீய எண்ணங்களை யாரும் வெளிக்காட்டுவதில்லை. இருந்த போதிலும் அனைத்து எண்ணங்களும் ஆழ்மனதில் பதிந்து விடுகின்றன. நினைவுக்கு எட்டாத வகையில் சில எண்ணங்கள் ஆழ்மனதில் உறங்குகின்றன. எந்த வகையான எண்ணமாக இருந்தாலும் கனவுகள் அவற்றை விரித்துக் காட்டி விடுகின்றன. உளவியல் மேதை சிக்மாண்டு பிராய்ட், ' கனவுகள் ஆழ்மனதிற்கு வழிகாட்டும் ராஜபாதை' என்று வர்ணிக்கிறார். உதாரணமாக, நீங்கள் கனவு காண்கிறீர்கள், கனவில் நீங்கள் , உங்கள்
அப்பா, அம்மா , தம்பி நால்வரும் பேசிக்கிகொண்டு irukkireergal . கனவில் உண்மை போலவே தெரிகிறது. விழித்தவுடன் தான் கனவு எனத்தெரிகிறது. கனவு காண்பது நீங்கள்தான். மற்ற மூன்று பிம்பங்கள் யார்? அதுவும் நீங்கள் தான். உங்களின் ஒரே மனமே ,ஒரே நேரத்தில் நான்கு வடிவங்களை எடுக்கிறது. இன்னும் எத்தனை வடிவங்கள் வேண்டுமானாலும் எடுக்கும். அதுதான் மனதின் பேராற்றலாகும்.
மனதின் வியத்தகு இயல்புகளில் ஒன்று கனவுகளாகும். ஒவ்வொருவரின் மனதிலும் உத்தேசமாக ஐந்து கோடி எண்ணங்கள் இருக்கலாம் என்கிறார்கள். மனதில் நல்ல எண்ணங்களும் இருக்கலாம், தீய எண்ணங்களும் இருக்கலாம். தீய எண்ணங்களை யாரும் வெளிக்காட்டுவதில்லை. இருந்த போதிலும் அனைத்து எண்ணங்களும் ஆழ்மனதில் பதிந்து விடுகின்றன. நினைவுக்கு எட்டாத வகையில் சில எண்ணங்கள் ஆழ்மனதில் உறங்குகின்றன. எந்த வகையான எண்ணமாக இருந்தாலும் கனவுகள் அவற்றை விரித்துக் காட்டி விடுகின்றன. உளவியல் மேதை சிக்மாண்டு பிராய்ட், ' கனவுகள் ஆழ்மனதிற்கு வழிகாட்டும் ராஜபாதை' என்று வர்ணிக்கிறார். உதாரணமாக, நீங்கள் கனவு காண்கிறீர்கள், கனவில் நீங்கள் , உங்கள்
அப்பா, அம்மா , தம்பி நால்வரும் பேசிக்கிகொண்டு irukkireergal . கனவில் உண்மை போலவே தெரிகிறது. விழித்தவுடன் தான் கனவு எனத்தெரிகிறது. கனவு காண்பது நீங்கள்தான். மற்ற மூன்று பிம்பங்கள் யார்? அதுவும் நீங்கள் தான். உங்களின் ஒரே மனமே ,ஒரே நேரத்தில் நான்கு வடிவங்களை எடுக்கிறது. இன்னும் எத்தனை வடிவங்கள் வேண்டுமானாலும் எடுக்கும். அதுதான் மனதின் பேராற்றலாகும்.
மனிதனின் எண்ணத்திற்கு இன்னொரு விசித்திரமான ஆற்றல் உண்டு. உங்கள் வீட்டில் ரோஷினி என்ற ஒரு பாப்பா இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். அது ஸ்கூலுக்கு போனவுடன், அதே பாப்பா உங்கள் முன்னால் இருப்பதை போல உங்களால் கற்பனை செய்ய முடியும். அது வெறும் கற்பனை என்று மற்றவர்கள் கூறுவார்கள். ஆனால் அந்த பாப்பா உங்கள் கண்ணுக்கு தெரிவது உண்மைதானே? உங்கள் எண்ணத்திற்கு இன்னும் வலுவை கூட்டினால் அதே பாப்பா பிறர் கண்ணுக்கும் புலனாகலாம். இன்னும் வலிமை அதிகரித்தால் கண் முன்னே உலவ விடலாம். இன்செப்ஷனில் இந்த கான்செப்ட் வருகிறது. ஆனால் மன நல மருத்துவர்கள் இதை மாய தோற்றங்கள் அல்லது பிரமை என்பார்கள்.
தெய்வமே அறிவாக மனதில் அமர்ந்திருப்பதால் அதற்கு தெரியாமல் யாரும் எந்த காரியத்தையும் செய்துவிட முடியாது. தவறு செய்த ஒருவர் சமுதாயத்தின் பார்வையிலிருந்தும், சட்டத்தின் பிடியிலிருந்தும் தப்பி விடலாம். ஆனால் எப்போதும் விழித்திருக்கும் உள்ளுணர்வு விடாது. செய்த தவறை உள்ளுணர்வு சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கும். நாமே மறந்து விட்டதாக நினைத்துக்கொண்டாலும் குற்றவுணர்ச்சி நம்மை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். கனவிலும், நினைவிலும் உறக்கத்திலும் கூட இது தொடரும். ' தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்' என்ற திருக்குறளை தாராளமாக இன்செப்ஷன் திரைப்படத்தில் பொருத்திப் பார்க்கலாம்.
நல்ல எண்ணமோ, தீய எண்ணமோ ஒருமுறை மனதில் பதிந்து விட்டால் அவ்வளவுதான். அவ்வளவு எளிதில் ஒரு எண்ணத்தை மனதில் இருந்து விலக்கிவிட முடியாது. மனமானது தன்னுடைய சுழலும் தன்மையால் மீண்டும் மீண்டும் பிரதிபலித்து ஒரு எண்ணத்தின் வலுவை கூட்டிக்கொண்டே இருக்கும். விதைக்கப்பட்ட எண்ணம் காலப்போக்கில் வளர்ந்து மிகப்பெரிய வலை போல மனதை ஆக்கிரமித்து விடும். எனவே நல்ல எண்ணங்களையே மனதில் பழக்கபடுத்திகொள்வது இயற்கையின் நியதிப்படி சரியானதாகும்.
இன்செப்ஷன் படத்தை பார்த்து விட்டு முழுதாக கதை புரிந்தவர்கள் எனக்கு ஒரு சேதி அனுப்பவும். யூகலிப்டஸ் தைல புட்டியும், மன சாந்தி அளிக்கும் ரிஹானா மெலடிப்பாடல்கள் (நன்றி: மகாலட்சுமி) அடங்கிய காசெட்டும் அனுப்பி வைக்கப்படும். தபால் செலவு உங்களுடையது.
Nice Analysis by Lingeswaran..
ReplyDeleteThe Director of this movie is Christopher Nolan.
Here are the other movies Directed by Nolan:
1)The Dark Knight (2008)
2)The Dark Knight Rises
(Releasing on 20/July/2012)
very nice article
ReplyDelete