காமமும் காதலும்...



காமம் இல்லாது காதல் இல்லை.
--- காமமே காதலுக்கு கடைக் கால் 
நாமாக பிரித்தது இரண்டு பெயர்களாய்.
--- காமமும் காதலும் ஒன்றுக்குள் ஒன்றுதான்.
பூமாதா போல் பொறுமை, விட்டுக் 
--- கொடுத்தல் வளைந்து கொடுத்தல் புரிதல் 
ஆமெனும் அரவணைப்பு ஆறுதல் அக்கறை
--- பரிவு அன்பு நம்பிக்கை இவையாவும் 
போம் வீணாக இருவருக்குள் தேனாக 
--- இனிக்கும் தாம்பத்திய உறவு இல்லையெனில்.

லிங்கேஸ்வரன் 

Comments