
பேரமைதியை நாடி நிற்கிறேன்...
பிறப்பு எனும் நுழைவாயில்..
பூத்துக் குலுங்கும்
உலகமெனும் அழகுச் சிறை..
திருந்த வழியிருந்தும்
திருத்த மொழியிருந்தும்
கண்ணைக் கட்டிக்கொண்டு
முட்டிக் கொள்ளும்
சக கைதிகள்...
சிக்கி சிதறும் என்னை
இந்த உலகிற்கு
அனுப்பியவனே
அருளும்
பேரமைதியை நாடி நிற்கிறேன்...!
பேரமைதி.அருமையான தலைப்பு.அழகான கவிதை.லிங்கேஸ் அமைதிக்குள் மூழ்கிப் போனதால் காண முடிவதில்லையோ?
ReplyDelete