ஆன்மீகக் கவிகள்...



ஆன்மீக வழியில் முன்னேறிப் போகுங்கால்
---- பெறும் அனுபவங்கள் அறிவை தரமுயர்த்தும்
மென்மேலும் திறமை பெருகும் - வாய்த்த
---- குருவால் கிடைத்த யாசகம் இது
என்றெண்ணி பணிவுடன் அடக்கம் கொள்ளு.
---- மாறாக தானே பெற்ற ஆற்றல் இதுவென
வீண்பேச்சு பேசினால், சூரியன் விலக
---- விலக ஒளியிழந்து தேய்ந்து போகும்
வான்மதியின் நிலையே கடைசியில் உண்டாகும்.
---- குருபக்தி நினைவு எப்போதும் மறக்கலாகாது.

----------------------------------------------------------------------------------

உருவமில்லா இறைவனை எடுத்துக் காட்ட
---- கருவிகளுக்கு திறன் இல்லை - மொழிகள்பலவும்
அருந்தமிழும் உதவாது வார்த்தைகள் வழியாக
---- விளக்க . ஓங்கி உயர்ந்த மெய்ப்பொருள்
இருப்பாக இங்குநம் உடலாகவும் உயிராகவும்
---- இணைந்து இயங்குவதே அதற்கு சாட்சி.

லிங்கேஸ்வரன்,

Comments

  1. கவிதைகள் தந்த ஆன்மிகக் கவிக்கோர் அஞ்சலி.

    ReplyDelete

Post a Comment