நீ விரித்து வைத்த கூந்தலை...



நீ நடக்கும்போது எழும் காலடி ஓசையை
---மலர்கள் விரியும்போது கேட்கிறேன்.
நீ பேசும்போது எழும் சப்தத்தை
---பறவைகளின் ஒலிகளில் கேட்கிறேன்.
நீ சிரிக்கும்போது உன் முகத்தை
---அன்று உதித்த நிலவில் பார்க்கிறேன்.
நீ விரித்து வைத்த கூந்தலை
---மயில் நடக்கும்போது பார்க்கிறேன்.

Comments