சாந்தி முஹுர்த்தம் என்றால் என்ன?






நானும் என் அன்பிற்குரிய நண்பர் சங்கரும் கேண்டீனில் டீ சாப்பிட்டு கொண்டிருந்தோம். கிடைக்கும் சிலநிமிடங்களில் இருவரும் மனம் விட்டு பேசிக்கொள்வது வழக்கம். அப்போது சங்கர் மெதுவான குரலில் என்னிடம்.....அண்ணே.....அன்னிக்கு நீங்க பசங்க கூட பேசிக்கிட்டு இருக்கும்போது சாந்தி முஹுர்த்தம் பத்தி என்னமோ சொல்லிக்கிட்டு இருந்தீங்கல்ல.....ஞாபகம் இருந்துச்சு யோசிச்சு பாத்தேன் மறந்து போச்சு. கொஞ்சம் திருப்பி சொல்லுங்க என்றார்.



சிலநிமிடங்களே இருந்ததால் சுருக்கமாக பின்வருமாறு கூறினேன். அனைவரும் குழந்தைகளாக பிறக்கிறோம். பதினான்கு வருடங்கள் வரை ஒன்றும் தெரிவதில்லை. பதினாலு பதினைந்து வயதில் குறிப்பிட்ட சில ஹார்மோன்கள் உடலில் சுரக்க ஆரம்பிக்கின்றன. அப்போதுதான் பிரச்சினையே துவங்குகிறது. என்னவெனில், ஒரு பெண்ணையோ ஆணையோ வெளியிலிருந்து பார்த்தால் சாதாரணமாக காட்சியளிக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. மனித உடல் ஒரு பாத்திரம் போன்றது. அதில் நிறைந்திருக்கும் நீரைப் போன்றதுதான் ஒவ்வொருவரின் மனமும். அந்த நீரில் எழும் அலைகளைப் போன்றதே மனதில் எழும் எண்ணங்கள் அனைத்தும். ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுந்து மோதிக்கொண்டிருக்கும் இடைவிடாத எண்ண அலைகளை அவரவர்களே அறிவர். ஒரு ஆண் அல்லது பெண்ணின் பருவ வயதில் காதல் உணர்வுகள் தானாக மனதில் எழுந்து கொந்தளிக்கத் துவங்குகின்றன. அவைகள் அவ்வபோது ஓய்வேடுத்தாலும் நிரந்தரமாக நிற்பதே இல்லை. யாரிடமும் அவை தெரியும்படி வெளிப்படுவதும் இல்லை. ( நன்றி : சிக்மண்ட் பிராய்டு ). இவ்வாறு உணர்ச்சிக் கொந்தளிப்பில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இரண்டு ஆன்மாக்கள் உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றிணைந்து சாந்தி (அமைதி) பெறுவதே சாந்தி முஹுர்த்தம் என்கிற புனிதமான நிகழ்ச்சியாகும் என்று முடித்தேன். அண்ணே...கலக்கிப்புட்டீங்க...என்றார் சங்கர். ட்ட்ட்டிரிங்....

அடுத்த வகுப்பிற்கு பெல் அடித்தது.

Comments

  1. இதுக்கு எதுக்கு அனுஸ்க்கா படம்

    ReplyDelete
  2. http://balajipalamadai.blogspot.com/

    see the ten things to learn from japan

    ReplyDelete

Post a Comment