பிளாக் ஹோல்ஸ் - ஓர் எளிய அறிமுகம்.




தினமலர், தினத்தந்தி, தி ஹிந்து ஆகிய நாளிதழ்களில் பிளாக் ஹோல்ஸ் பற்றி அவ்வப்போது ஆராய்ச்சி துணுக்குகள் கட்டங்கட்டி வெளிவரும். பிளாக் ஹோல்ஸ் என்பது அடிக்கடி கேள்விப்பட்ட பெயர்தான் என்றாலும் அதைப் பற்றி ஓரளவாவது தெளிவாக அறிந்தவர்கள் சிலர்தாம். பிளாக் ஹோல்ஸ் கட்டுரை எழுதலாம் என எண்ணி விட்டு, எழுதாமல் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இடையில் ஒருநாள், நானும் என் சினேகிதி பூர்ணாவும் காலேஜிற்கு மட்டம் போட்டுவிட்டு எந்திரன் படம் பார்க்க சென்று விட்டோம். அதில் ஒரு காட்சியில் ஐஸ்வர்யா ராய் , ரஜினியிடம் ஒரு உரையாடலில் இப்படியா காதலிக்கு பரிசளிப்பீர்கள் என கோபமாக, ஸ்டீபன் ஹாக்கிங்கின் 'தி பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம் ' என்ற நூலை காட்டிக்கேட்பார். உலகப் புகழ்பெற்ற அந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள், பிக் பெங் தியரி, பிளாக் ஹோல்ஸ், லைட் கோன்ஸ் ஆகியவற்றை பற்றி எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும்படி விவரித்திருக்கிறார். ஸ்டீபன் ஹாக்கிங்கை கூட, சினிமாவில், அதுவும் தமிழ் சினிமாவில் கொண்டுவர முடியுமென்றால் அது, எழுத்துலக பிதாமகன் சுஜாதாவால் மட்டுமே முடியும். சுஜாதா என்கிற நிகர்நிலை பல்கலைகழகத்தில் பாடம் பயிலும் என்னைப்போன்ற மாணவனுக்கு எந்திரன் படம் பார்த்து ரொம்ப பெருமையாக இருந்தது.


பிளாக் ஹோல்சை தமிழில் கருங்குழிகள் அல்லது கருந்துளைகள் என்கிறார்கள். சிலர் அண்டப்பாழ் என மொழிபெயர்க்கிறார்கள். பிளாக் ஹோல்ஸ் என்ற தலைப்பானது அறிவியல் ஆர்வலர்களுக்கு எப்போதும் ஒரு வசீகரமான, புதிரான, இன்னும் சரியாக புலப்படாத, ஆர்வத்தை தூண்டும் ஒரு சப்ஜெக்டாகும். கடினம் போல் தோன்றினாலும் பிளாக் ஹோல்ஸ் புரிந்து கொள்வதற்கு எளிதான ஒன்றுதான்.


ஒரு மனிதன் பிறக்கிறான், வாழ்கிறான், மரிக்கிறான். சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலம் எழுபது , என்பது ஆண்டுகள். அதைப்போன்றே, ஒரு நட்சத்திரமும் பலகோடி ஹைட்ரஜன் அணுக்கள் கூடி உருண்டை வடிவமான நெபுலாவாக பிறப்பெடுத்து, பல்லாயிரம் வருடங்கள் கழித்து நெருப்பு உருண்டையாகி - பின் வெள்ளைக் குள்ளன் (ஒயிட் ட்வார்ப்) - பழுப்புக் குள்ளன் - சிகப்பு அரக்கன் (ரெட் ஜியன்ட்) - என ஒவ்வொரு வடிவமாக மாற்றம் பெற்று உருமாறி, இறுதியில் காற்று போன பாலிதீன் பை ஒட்டிப்போவதுபோல் சுருங்கி இறுகி, சூப்பர் நோவா என்ற வடிவம் பெற்று கும்மிருட்டான பேரண்ட வெளியில் சிதைந்து, கரைந்து போகிறது. இவ்வாறு நடக்கும் ஒரு நட்சத்திரத்தின் ஜனன-மரண சரித்திரத்தில் கடைசியாக நட்சத்திரம் சுருங்கிபோகும் நிலையில் ஏற்படும் ஒரு நிகழ்வுதான் பிளாக் ஹோல்ஸ் என்ற ஓர் அற்புதமான, புதிரான வானியல் உண்மையாகும்.


ஒரு நட்சத்திரத்தின் வாழ்நாள் உத்தேசமாக ஆயிரம் கோடி ஆண்டுகள் என கணிக்கலாம். நட்சத்திரத்தின் ஆயுளோடு ஒப்பிடும்போது ஒரு மனிதனின் ஆயுள் மிகமிக அற்பமானது. மாபெரும் நமது பிரபஞ்சத்தோடு ஒப்புநோக்கும்போது - மனித உடலின் உயர, அகல, எடையை வைத்து கணக்கிட்டால் - மனித உருவம் சிறியதிலும் சிறியது; அற்பத்திலும் அற்பமானது. இது போன்ற வானியல் உண்மைகளையெல்லாம் அனைவரும் அறிய ஆர்வம் காட்டுவதுமில்லை; தெரிந்து கொள்வதுமில்லை. அதனால்தான் என்னவோ, வாழ்க்கை சாஸ்வதமானது என்பது போலவும், தான்தான் பெரியவன் என்பது போலவும் ஆட்டம் போடுகிறார்கள்.


இங்கே ஒரு முக்கியமான குறிப்பு, கிரகம் என்பதும் நட்சத்திரம் என்பதும் சூரியன் என்பதும் மூன்றும் ஒன்றுதான். கிரகம் என்பது பொதுவான பெயர். பரிணாம நிலைகளில் அந்தந்த கட்டத்தில் ஒவ்வொரு பெயரைக் கொண்டு அவை அழைக்கப்படுகின்றன. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம்தான் நாம் பார்க்கும் சூரியன். வான வெளியில் சிதறிக்கிடக்கும் கோடானுகோடி நட்சத்திரங்கள் அனைத்தும் சூரியன்களே. பலகோடி தொலைவில் அவை இருப்பதால் அந்த சூரியன்கள் கண்சிமிட்டி கொண்டே இருப்பதைப்போல தெரிகிறது. இவற்றைத்தவிர விண்வெளியில் விண்கற்கள், எரிகற்கள் போன்றவையும்- தூசுக்கள் சேர்ந்து உருவான கொமெட் எனப்படும் வால்மீன்கள் போன்றவைகளும் விண்வெளியில் உலாவி வருகின்றன. இவை அனைத்தும் அவற்றுக்குரிய தாய் கிரகத்திலிருந்து பிட்டுக்கொண்டு தனியாக வந்தவை. இதுவரை கூறப்பட்ட செய்திகள், அவசியம் அறிய வேண்டிய அடிப்படை வானியல் சங்கதிகள்.



பிளாக் ஹோல்ஸ் - ஓர் எளிய அறிமுகம் அடுத்த பதிவிலும் தொடர்கிறது.

Comments

  1. பிளாக் ஹோல்ஸ் மிக நன்றாக உள்ளது! தொடரட்டும்!

    ReplyDelete
  2. /////ஸ்டீபன் ஹாக்கிங்கை கூட, சினிமாவில், அதுவும் தமிழ் சினிமாவில் கொண்டுவர முடியுமென்றால் அது, எழுத்துலக பிதாமகன் சுஜாதாவால் மட்டுமே முடியும். /////
    நல்ல தகவலுடன் ஆணித்தரமான ஒரு விடயத்தையும் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. தொடர்ந்து எழுதுங்கள் எதிர் பார்த்திருப்பேன்

    ReplyDelete
  4. வாக்குப் பட்டைகளையும் இணைக்கலாமே...

    ReplyDelete
  5. Yes sutha...im trying attaching the votes..

    ReplyDelete
  6. அருமை லிங்கேஷ். உனது அறிவியல் ஆர்வமும் அதை மற்றவர்கள் புரியும்படி எடுத்து சொல்லுவதும் மிக அருமை.

    ReplyDelete

Post a Comment