
கண்கயல் எனும் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம்ம சிறுசிரல்-பின்சென்றும்
ஊக்கி எழுந்ததும் எறிந்த கல்லா ஒன்புருவம்
கொட்டிய வில்வாக்கு அறிந்து.
சிறிய மீன்கொத்தி பறவையானது என் தலைவியின் கண்களை, கயல் மீன்கள் என் நினைத்து அவற்றை கொத்தி தின்ன வந்தது. அருகில் வந்தவுடன் அவளின் வளைந்து நெளிந்த அழகான புருவங்களை வில் என நினைத்து பயந்து பறந்தோடிவிட்டது.
நாலடியாரில் கடைசி பகுதியில் வரும் காமநுதலியல் என்ற தலைப்பில் உள்ள மேற்கண்ட பாடலை, ஒரு வெள்ளை தாளில் எழுதி, பலநாட்களாக கண்கள் இரண்டால் நான் பேசிக்கொண்டு வந்த ஒரு பெண்ணிடம் கொடுத்து, நாம் காதலிக்கலாமா என்று கேட்டேன். நான் அவ்வாறு கொடுத்ததை தவறாக நினைக்காமல் பெருந்தன்மையோடு அவள் என்னிடம் பேச்சை தொடர்ந்தாள்.
முதலில், என்ன இது? என்றார். இது நாலடியாரில் உள்ள ஒரு செய்யுள் என்றேன். கவிதை நன்றாக இருக்கிறது என்றார். உங்களுக்காகதான் இதை தேடி எடுத்து எழுதினேன் என்றேன். அதற்கு அவள், உங்களுக்கு தமிழ் ஆர்வம் அதிகம் என்று கூறி பேச்சை மாற்றினார். உங்கள் கண்கள்தான் என்னை இக்கவிதையை தேட வைத்தது என்றேன். மன்னிக்கவும் என்றார். சிலநிமிடங்கள் கழித்து.....நீங்கள் மிகவும் நல்லவர்.....உங்களை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.....உங்களைப்போல் ஒருவரை நான் பார்த்ததே இல்லை.....ஆனால் ஏற்கனவே நானும் இன்னொருவரும் காதலிக்கிறோம். அதனால் உங்கள் வேண்டுகோளை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.....உங்களுக்கு என்னை விட படித்த, பொருத்தமான பெண் கிடைப்பாள் என அன்பாக கூறினார்.
கிணத்தடியில் போட்ட கல்போல, மனதின் அடியில் படிந்து விட்ட அந்த எழிலோவியம் அடிக்கடி கனவில் வந்துகொண்டே இருந்தது. மெல்ல மெல்ல சிலநாட்களில் அது நின்று போனது.....ஆனால், எப்போதும் விரிந்திருக்கும் கருப்பு வெள்ளை நிற மலர்கள் போன்ற அவளின் கண்களையும், வெண்ணெய்யில் வழுக்கி செல்லும் லாவகமான நடையுடன் நினைத்தாலே இனிக்கும் அவளின் மென்மையான குரலையும் என்னால் எப்போதும் மறக்க முடியாது. உங்கள் குரலைப்போல் ஒரு குரலை நான் இதுவரை கேட்டதே இல்லை.....அதை நான் மறக்கவே முடியாது என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மொபைல் கால் கட்டாகி விட்டது.
அதன்பின் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை.
கிணத்தடியில் போட்ட கல்போல, மனதின் அடியில் படிந்து விட்ட அந்த எழிலோவியம் அடிக்கடி கனவில் வந்துகொண்டே இருந்தது. மெல்ல மெல்ல சிலநாட்களில் அது நின்று போனது.....ஆனால், எப்போதும் விரிந்திருக்கும் கருப்பு வெள்ளை நிற மலர்கள் போன்ற அவளின் கண்களையும், வெண்ணெய்யில் வழுக்கி செல்லும் லாவகமான நடையுடன் நினைத்தாலே இனிக்கும் அவளின் மென்மையான குரலையும் என்னால் எப்போதும் மறக்க முடியாது.
ReplyDelete.....தமிழில் அப்படியே துள்ளி விளையாடுறீங்க..... அருமை!
எங்கே சகோதரா நீண்ட நாளாகக் காணல... அருமையா ஒரு ரசனைப் பதிவு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉண்மையா?கற்பனையா?தம்பி!
ReplyDeleteThanks Chitra akka and Sutha..
ReplyDelete90% unmai murugeswari akka..
ReplyDelete