மீன்முள் வரைபடம் - சுருக்கமான அறிமுகம்.






மேனேஜ்மென்ட் எனப்படும் மேலாண்மை இயலில் ஜப்பானியர்களின் பங்கு குறிப்படத்தக்கது. குறிப்பாக தர மேலாண்மை எனப்படும் குவாலிட்டி மேனேஜ்மென்ட் துறையில் . கேயிசன் மேனேஜ்மென்ட், டோடல் குவாலிட்டி மேனேஜ்மென்ட், டோடல் ப்ரொடக்டிவிட்டி மெயிண்டனன்ஸ், ஜஸ்ட் இன் டைம் ப்ரொடக்சன் ( உடனடியாக உற்பத்தி செய்தல்) போன்றவை ஜப்பானியர்களால் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது தொழிற்சாலைகளில் வெற்றிகரமாக உலாவரும் டெக்னிக்கல் பிலாசபிக்கள்.



ஜப்பானில் தயாராகும் பொருட்கள் தரத்தில் பெரும்பாலும் நூல்பிடித்தாற்போல் சரியாகவே இருக்கும். தொழில்நுட்பத்தோடு சேர்த்து தரத்தையும் பேணுவதில் ஜப்பானியர்கள் மிகுந்த கவனம் செலுத்துபவர்கள். டகுச்சி எனும் ஒரு ஜப்பானிய எஞ்சினியர் தர மேலாண்மையில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்தார். அதாவது, ஒரு அடி உயரமும், பத்து சென்டிமீட்டர் சுற்றளவும் உள்ள ஒரு இரும்பு உருளையை தயாரிக்க, இரும்பை உருக்கி, அச்சில் ஊற்றி, பின் குளிர வைத்து சூடு ஆறியவுடன் வெளியில் எடுக்க வேண்டும். சூடு என்றால் ஐநூறு, அறுநூறு டிகிரி செல்சியஸ். வெளியில் எடுத்தவுடன் அளந்து பார்த்தால் இரும்பு உருளை சரியாக பத்து சென்.மீ. இருக்காது. சிலபல டெக்னிக்கல் காரணங்களால் அளவு சிறிது கூடலாம்; அல்லது குறையலாம். தவிர்க்க இயலாது. இதற்காக உற்பத்தி பிரிவில் என்ன செய்வார்கள் எனில், டாலரன்ஸ் லெவல் என ஒரு அளவை நிர்ணயிப்பார்கள். அதாவது இரும்பு உருளை அதிகபட்சமாக பதினோரு சென்.மீட்டரும், குறைந்தபட்சம் ஒன்பது சென்.மீட்டரும் இருக்கலாம். இவ்வாறு கடைசி தர பரிசோதனையில் இரும்பு உருளை ஒன்பது முதல் பதினோரு சென்.மீ. வரை எந்த அளவு இருந்தாலும் ஒகே

செய்து அனுப்பி விடுவார்கள். ( மேற்கண்ட அளவுகள் உதாரணத்திற்கு மட்டும் ). சுற்றளவு பதினொன்றுக்கு மேல் சென்றாலும், ஒன்பதுக்கு கீழ் சென்றாலும் குறைபாடுள்ள பொருள் என்று லேபில் ஒட்டி திருப்பி அனுப்பிவிடுவார்கள். இந்த நடைமுறைதான் காலங்காலமாக தொழிற்சாலைகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.



டகுச்சி இந்த நடைமுறையில் ஒரு திருத்தத்தை கூறினார். தேவைப்படும் சரியான அளவிலிருந்து, தயாரிக்கப்படும் பொருளின் அளவு ஒவ்வொரு முறை விலகும்போதும் கம்பெனிக்கு ஒரு குறிப்பிட்ட விகிதம் பண இழப்பு ஏற்படுகிறது என்றார். குறைபாடுள்ள பொருட்களை மீண்டும் சரி செய்தல், ஊழியர்களுக்கு அவ்வேளையில் கொடுக்கப்படும் அதிக சம்பளம், வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் குறைபாடுள்ள பொருட்களை சர்வீஸ் செய்ய ஆகும் செலவு இவை கம்பெனியின் லாபத்தை பாதிக்கும் என்றார். மேலும் வாடிக்கையாளர்களுக்கு குறைபாடுள்ள பொருட்களால் உண்டாகும் பண இழப்பு, மன உளைச்சல் ஆகிய சமுதாய நல கருத்தையும் தன் திருத்தத்தில் சேர்த்து கூறினார்.



ரோபஸ்ட்நஷ் என்ற முக்கிய தன்மையையும் டகுச்சி வலியுறுத்தினார். எந்தவித பொருளானாலும் , சாதனமானாலும் அதன் பயன்பாட்டில் ஒரு ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும். அதாவது எல்லாவித சூழ்நிலைகளிலும் அதன் இயக்கம் / பயன்பாடு ஓரளவு சரியாகவே இருக்கவேண்டும். உதாரணமாக ஒரு டூவீலர் சமதளங்களில் நன்றாக ஓடுகிறது. ஆனால் மலைகளில் ஏறும்போது முக்குகிறது; பள்ளங்களில் வேகமாக உழன்டு ஓடுகிறது. அப்படியானால் அந்தவகை டூவீலர் ஸ்திரத்தன்மை இல்லாதது. ஒரு சாக்லேட் முப்பது டிகிரிக்கு கீழ் கல்போல இறுகியும், அறுபது டிகிரிக்கு மேல் உருகியும் ஓடினால் அந்த சாக்லேட் ஸ்திரத்தன்மை இல்லாதது.



இவ்வாறு பொருட்கள் / சாதனங்களில் உண்டாகும் குறைகளை கண்டறிந்து சரிசெய்வதற்கும், ஸ்திரத்தன்மையை ஒரேமாதிரி பேணுவதற்கும் டகுச்சி ஓர் எளிய உத்தியை கூறினார். அந்த உத்தியின் பெயர் பிஷ் போன் டயக்ரம். தமிழில் மீன்முள் வரைபடம். ஜப்பானிய பாஷையில் இஷிகவா டயக்ரம் என அழைக்கப் படுகிறது. இதில் என்ன செய்கிறார்கள் என்றால், ஓர் குறைபாட்டிற்கு காரணமான - கண்ணுக்கு புலனாகும் சாத்தியங்களை முதலில் கிடைமட்டமான ஒரு மேற்கோட்டின் இருபுறமும் கோடுகளை வரைந்து அதில் ஒவ்வன்றாக எழுதிவிட வேண்டும். பிறகு ஒவ்வொரு சாத்தியக்கூறையும் தனித்தனியாக ஆராய்ந்து உட்சாத்தியங்களை அந்தந்த கோட்டின் அருகில் பட்டியலிட வேண்டும். கடைசியில் பார்த்தால், நாம் ஆராயும் குறைபாட்டிற்கான காரணங்கள் எது எது என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரிந்து விடும். ஒருமுறை ஒரு பொருளுக்கு / சாதனத்துக்கு மீன்முள் வரைபடம் வரைந்துவிட்டால் போதும். அப்பொருளின் பாகங்கள்- அவை வேலை செய்யும் விதம், மூலப்பொருட்கள் என அனைத்து விவரங்களும் நமக்கு அத்துப் படியாகி விடும்.



நாம் சந்திக்கும் சிக்கல்கள், எதிர்கால திட்டம், ஓரிரு முடிவுகளில் எந்த முடிவெடுப்பது என்ற நிலை - என நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளிலும் இந்த மீன்முள் உத்தியை சிற்சில திருத்தங்களோடு பயன்படுத்திக் கொள்ளலாம் எனபது உபரித் தகவல்.

Comments

  1. நாம் சந்திக்கும் சிக்கல்கள், எதிர்கால திட்டம், ஓரிரு முடிவுகளில் எந்த முடிவெடுப்பது என்ற நிலை - என நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளிலும் இந்த மீன்முள் உத்தியை சிற்சில திருத்தங்களோடு பயன்படுத்திக் கொள்ளலாம் எனபது உபரித் தகவல்.


    ......ஒரு மீனை வச்சு இவ்வளவு தகவல்களா? சூப்பர்!

    ReplyDelete
  2. சிறப்பான தகவல்!

    ReplyDelete
  3. Hi lingesh, just help me in this, in our vedathiri manavalakalai course, during 1990's, there is a chapter of soul getting out of body and come back again, u know this.//கி.பி.1996 வரை தவத்திரு வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலைப் பாடத்திட்டத்தில் சூட்சும உடல் பயணம் ஒரு பாடப்பகுதியாகவே இருந்தது.பிற்காலத்தில் பல்வேறுகாரணங்களால் அது நீக்கப்பட்டுவிட்டது.//, post a topic on this after getting details.

    ReplyDelete
  4. jegadheesh....surely i ll enquire and tel u...or i ll write it in my blog..thanks for visit..

    ReplyDelete
  5. Sir, Its not Taguchi's Principal. Fish boe is the concept of Ishikawa.

    ReplyDelete
    Replies
    1. You are right sir. Thanks for correcting the mistake..

      Delete

Post a Comment