
ஈ.எஸ்.பி. என்பது ஒரு ஆற்றலோ, கலையோ அல்ல. மாறாக, மனிதமனத்தில் இயற்கையாக நடக்கும் தொடர்நிகழ்ச்சியாகும். இப்பரந்த பிரபஞ்சவெளியில் உலாவும் கோடான கோடி கோள்களில் நம் பூமியும் ஒன்று. பூமியில் வசிக்கும் அனைத்து ஜீவேராசிகளின் மனங்களுக்கும் இடையே ஒரு சூட்சுமமான, பரஸ்பர தொடர்பு (அதாவது கம்யுனிகேஷன்) எப்போதும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. திடீரென, அனுபவமாக நமக்கு அந்த எண்ணத் தொடர்பு புலனாகும்போது மிகவும் வியப்பளிக்கிறது.
டெலிபதி- தொலைவில் நடப்பதை உணர்தல், பொருள்களை கண்ணால் பார்த்தே நகட்டுவது/ ஸ்பூனை வளைப்பது - இவற்றை சைக்கோ கைனசிஸ் என்கிறார்கள். இவ்வித செயல்களும் ஈ.எஸ்.பி. யில் சேர்த்திதான்.
ஒருவர் வரப்போவதை சில நிமிட அல்லது நொடிகளுக்கு முன் அறிதல், நடக்கபோவதை முன்கூட்டியே அறிதல், ஒருவர் ஒன்று சொல்ல நினைப்பார் அருகிலுள்ள நண்பர் உடனே அதை கூறிவிடுவார், மனதில் ஒரு நண்பரின் எண்ணம் தோன்றும் உடனே அவர் போன் செய்வார் - இவையெல்லாம் ஈ.எஸ்பி.க்கு உதாரணங்களாகும். இது போன்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் எல்லோருக்கும் நடந்தே இருக்கும்.
தொடர்ச்சியாக தியான பயிற்சி செய்பவர்களுக்கு மனதின் அலைவேகம் குறைந்து மன அலை நுண்மையாகி மனதின் ஏற்பு திறன் அதிகமாகிறது.
அதேபோன்று ஒரு விடயத்தில் ஆழ்ந்து மனதை செலுத்தும்போது மன அலை நுண்மையாகி அப்போதும் மன ஏற்பு திறன் கூடுகிறது. இவ்விரண்டு சாத்தியங்களும்தான் பு.க. அனுபவத்திற்கு காரணங்களாக அமைகின்றன. ஆனால் ஈ.எஸ்.பி. ஆற்றல் கைவரவேண்டும் என நினைத்து தியானம் செய்தால் அது நடக்காது. அந்த எண்ணமே தடையாக அமைந்துவிடும்.
நான் கல்லூரியில் படிக்கும்போது, ஒருமுறை திருச்சியிலிருந்து பஸ்ஸில் கிளம்பும்போது என்கூட படிக்கும் சுபஸ்ரீ பஸ்ஸ்டாண்டில் இருப்பாள் என்ற எண்ணம் திடீரென பளிச்சிட்டது. அடுத்த பத்து நொடிகளில் பஸ் அவளை கிராஸ் செய்ததது. மிகுந்த வியப்பில் அவளுக்கு பஸ்ஸில் இருந்தபடியே டாட்டா காட்டினேன். என் அத்தை பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்ற ஆழ்ந்த எண்ணமும், விருப்பமும் பலவருடங்களுக்கு முன் எனக்கு இருந்தது. அந்த சமயத்தில், ஒரே வருடத்தில் ஐந்து முறை அவள் வருவதை முன்கூட்டியே அறிந்திருக்கிறேன். இதுபோன்ற ஏராளமான ஈ.எஸ்.பி. சம்பவங்கள் எனக்கு நண்பர்களுடனும் நடந்துள்ளன. நடந்து கொண்டும் இருக்கின்றன. ஒருமுறை மனதில் பளிச்சிட்ட ஒருபாடல், அடுத்த சிலநொடிகளில் அப்படியே எப்.எம். ரேடியோவில் ஒலித்தது. இவைகளை பெருமைக்காக கூறவில்லை. அனைவருக்கும் இதேபோல் நடந்து கொண்டுதான் இருக்கும். நான் அவ்வப்போது தியானம் செய்வதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
தொடர்ச்சியாக தியான பயிற்சி செய்பவர்களுக்கு மனதின் அலைவேகம் குறைந்து மன அலை நுண்மையாகி மனதின் ஏற்பு திறன் அதிகமாகிறது.
ReplyDelete..... very nice.
Thanks a lot Mrs.Chitra for ur visit and comments...
ReplyDeleteநண்பரே உளவியல் ரீதியாக தாங்கள் கூறியிருப்பது மிகச்சரியே!
ReplyDeleteசிலர் “நான் நினைச்சேன் இது நடக்கும்னு!” என்று கூறுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். அல்லது நமக்கே கூட சில சமயங்களில் ஒரு விஷயம் முழுமையாக அல்லது பகுதி மட்டும் நடக்கலாம் என்பதை உணர்ந்திருக்கலாம். இவையெல்லாம் ஈ.எஸ்.பி சம்பந்தபட்டவைதான் தாங்கள் கூறியது போல
ஈ.எஸ்.பி ஒரு கலை அல்ல அது ஒரு உணர்வு. அது மனதை ஒருமுகப் படுத்தும் ஆற்றலை வளர்க்கும்போது சிலருக்கு ஏற்படலாம்.
தங்கள் பதிவு மிக நன்றாக உள்ளது. மேலும் தகவல்களை எழுதுங்கள். வாழ்த்துக்கள்! உளவியல் சார்ந்த பதிவென்பதால் கூடுதல் நன்றிகள் உங்களுக்கு!:-)
Thanks a lot S.K. for visit and comments...
ReplyDelete//..ஒருமுறை மனதில் பளிச்சிட்ட ஒருபாடல், அடுத்த சிலநொடிகளில் அப்படியே எப்.எம். ரேடியோவில் ஒலித்தது..//
ReplyDeleteஉண்மை தான் சகோதரா உனக்குப்பல தடவை நடந்திருக்கு..