தமிழ்மொழி 'ழ'-வின் தனிச்சிறப்பு...


நண்பர் ம.தி.சுதா ஒரு கட்டுரையில் தமிழ் 'ழ'- வை பற்றி எழுதியிருந்தார். தமிழ், மலையாளம், மண்டரின் ஆகிய மொழிகளில் மட்டும்தான் ழ உள்ளது என எழுதியிருந்தார். குஜராத்தியிலும் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
பிறமொழி 'ழ' க்களை பற்றி எனக்கு அவ்வளவு சரியாக தெரியவில்லை.
தமிழ் 'ழ' எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதின் பின்புலத்தை மட்டும் இங்கு எழுதுகிறேன்.

'ழ' வை பற்றி அறியும் முன் நம் முன்னோர்களாகிய சித்தர்களின் ஜீவசமாதி என்ற தத்துவத்தை சற்று அறிந்து கொண்டால்தான் 'ழ' -வின் மகத்துவம் பற்றி புரிந்துகொள்ள முடியும்.

ஜீவசமாதி: ஜீவசமாதியை பற்றி சுருக்கமாகவே இங்கு கூறுகிறேன். விரிக்கின் பெருகும் ஆதலால், மற்றொரு சமயம் விரிவாக எழுதுகிறேன். முற்காலத்தில் ஐநூறு, ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த நம் சித்தர்கள் ஜீவசமாதி அடைவதற்காக 'லம்பிகா யோகம்' என்ற முறையை கையாண்டார்கள். இந்த யோகா முறையை அவர்கள் தவளை, உடும்பு, ஓணான் முதலிய விலங்குகளிலிருந்து கற்றுக்கொண்டார்கள். அதாவது என்னவென்றால், சித்தர்கள் நாவை மடக்கி மேல் அன்னத்தில் ஓட்ட வைத்துக்கொண்டு, அப்படியே தவத்தில் அமர்ந்து விடுவார்கள். அதேசமயத்தில் ரகசியமான ஒருவித பயிற்சியை செய்வார்கள். அதைப்பற்றி இங்கு வெளிப்படையாக சொல்ல இயலாது. இவ்வாறு சிறிது சிறிதாக, மணிக்கணக்கில் பயிற்சியை கூட்டிக்கொண்டே செல்வார்கள். அப்போது என்ன ஆகுமெனில், மனிதனின் விந்துவில் உள்ள சாரமானது, பதங்கமாகி கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி
மூளைக்கு சென்று சேர்ந்து கொண்டே இருக்கும். கவனிக்கவும், மேலே செல்வது விந்து அல்ல. விந்துவின் சாரம்தான். இதனை எளிதாக காந்தசக்தி என அழைக்கலாம். தத்துவத்தில் இது ஓஜஸ் அல்லது தேஜஸ் எனப்படுகிறது.
இவ்வாறு தொடர்ந்து பலநாட்கள் செய்து வரும்போது, உடம்பானது சிறிது சிறிதாக மரத்துபோய், உணர்வற்றுக் கொண்டே வரும். இது கோமா நிலை போன்றது. அதாவது உடலில் உயிர் இருக்கும், உடல் இயக்கங்கள் எல்லாம் நுண்ணியதாக நடந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் உணர்வு இருக்காது; மனம் செயல்படாது. சீடர்கள் அப்படியே உடலை தூக்கிக்கொண்டு சென்று ஏற்கனவே தயாராக உள்ள குழியில் வைத்து மூடிவிடுவார்கள். இதுதான் ஜீவசமாதி.

தமிழ் 'ழ' : இப்போது ழவிற்கு வருவோம்... ழ என்று உச்சரிக்கும்போது என்ன செய்கிறோம்? நாவை மடக்கி மேல் அன்னத்தில் தொட வேண்டும்- இப்போது மூளை பகுதியில் உள்ள பீனியல் சுரப்பி ஆக்டிவேட் ஆகும். அதாவது சஹாஸ்ராதார சக்கரம் திறக்கிறது. பின் என்ன செய்கிறோம்? ஒலி வருவதற்காக சற்று அழுத்தம் குடுத்து 'ழ' என்று உச்சரிக்கிறோம். மூலாதாரத்தில் உள்ள சூட்டின் காரணமாக, விந்து சுரப்பியில் உள்ள விந்துவின் சாரமானது எப்போதும் சிறிதளவு பதங்கமாகிக்கொண்டே இருக்கும். சத்தம் வருவதற்காக வாயில் சிறிது அழுத்தம் கொடுக்கிறோமே, அப்போது அந்த ஓஜஸ் சக்தியானது சட்டென்று ஒருவினாடியில் அனைத்து சக்கரங்களையும் கடந்து மேலேறி மூளைக்கு சென்று நிரம்புகிறது. இந்த ஓஜஸ் சக்தியானது மூளைக்கு நலமும், வளமும், அமைதியும், சீர்மையும் அளிக்கிறது. இதுவே தமிழ் 'ழ' உருவான ரகசியமாகும். 'ழ'வை சரியாக உச்சரித்தால் இன்னும் ஏராளாமான பலன்கள் கிடைக்கும்.

பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்களிடையே மெய்ப்பொருள் சிந்தனை மிகுந்திருந்தது. இதற்க்கு சரியான உதாரணம், எந்த தமிழருடைய ஆண் பெண்ணுடைய பெயர்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்...அவற்றை பிரித்துப்பார்த்தால் கடைசியில் தெய்வத்தின் பெயராகவே முடியும் (தொண்ணூறு சதவீதம்). மேலும் தமிழர்களின் பண்பாடும், இறை உணர்வும் ஒன்றாக கலந்தே இருந்தன. இதை பழந்தமிழ் இலக்கியங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். எனவே, தமிழில் 'ழ' எனும் எழுத்தை மேற்கண்ட பின்புலத்தில்தான் தமிழர்களோ, தமிழ் சித்தர்களோ உருவாக்கியிருப்பார்கள் என்பது என் துணிபு.

எச்சரிக்கை: மேற்கண்ட ஜீவசமாதி முறையை யாரும் தயவுசெய்து முயற்சிக்க வேண்டாம். முறையான வழிகாட்டுதல் இல்லாமல் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால் உடலும், மனதும் பாதிக்கப்படுவது நிச்சயம்; பேராபத்து.



Comments

  1. சகோதரா அருமையான தேடல் தமிழ் வளர்க்க உங்களைப் போல் ஒரு சிலர் போதும். எனது கணணி கோளாறால் இன்று தான் பார்க்க முடிந்தது. ஏன் நீங்கள் உங்கள் பதிவுகளை திரட்டிகளில் சேர்ப்பதில்லை. இக்கட்டுரையை face book ல் போட அனுமதி தருவீர்களா?... தமிழுக்காக கேட்கிறேன்...
    என் முகவரி mathisuthakaran@gmail.com

    ReplyDelete
  2. Dear Sutha...naan blog-kkirku puthiyavan enbathaal enakku blogai vadivamappadhu patri siridhu siridhaaga thaan arindhukondu varugiren...
    Thirattigalil serppadhu endraal enna?
    Enakku neengal Vazhi kaatti udhavavum..

    ReplyDelete

Post a Comment