

எனது நண்பர் பிரதீப்குமார், ஒரு மென்பொருள் எஞ்சினியராக பெங்களூரில் வேலை பார்க்கிறார். இவருக்கு நாலைந்து மொழிகளின் எழுத்து வடிவம் நன்றாக தெரியும். அவரின் பொழுதுபோக்கே மொழிகளை ஆராய்வது. ஒருநாள் நானும், பிரதீப்பும் எழுத்து வடிவங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது பிரதீப் சில சுவாரசியமான விஷயங்களை கூறினார். அதைத்தொடர்ந்து இருவரும் பல்வேறு மொழிகளின் சொல் அமைப்புகளை பற்றி ஒரு சிறிய கலந்தாய்வு செய்தோம். மிக ஆர்வமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. முடிவில், இருவரும் சேர்ந்து மொழியியலில் ஒரு ஆராய்ச்சி செய்து வெளியிடலாம் என திட்டம் போட்டுள்ளோம். அதிலிருந்து ஒருசில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒன்று, சித்திர எழுத்துக்களிருந்து பிராமி எழுத்துக்களும், பிராமியிலிருந்து தமிழும் சமஸ்கிருதமும் இரண்டு கிளைகளாக பிரிந்தன எனவும் தெரியவந்தது.
இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், இந்தியாவிலுள்ள அனைத்து மொழி எழுத்து வடிவங்களையும் ஒன்றாக வைத்துக்கொண்டு ஆராய்ந்தால் ஒரே வியப்பு. அனைத்து வடிவங்களும் பிராமி எழுத்துக்களிலிருந்து சிறுசிறு மாற்றங்களை பெற்று உருவாகியுள்ளன என்பது தெளிவாக தெரிந்தது. சிங்கள சொல்வடிவம் கூட பிராமியிலிருந்து உருவாகிஉள்ளது எனத்தெரிகிறது. நான் கூறும் மேற்கண்ட கூற்றுகளை யாரும் மறுக்கும் முன் , ஒரு சிறு வேலை செய்துவிட்டு மறுக்கவும். பிராமி வடிவம், அனைத்து இந்திய எழுத்து வடிவங்கள், சிங்கள எழுத்து வடிவம் இவைற்றையெல்லாம் ஒன்றாக வைத்துக்கொண்டு பார்க்கவும். மிகவும் நுட்பமாக ஆராய்ந்தால் மட்டுமே, பிராமியிலிருந்து பிற எழுத்து வடிவங்கள் எவ்வாறு பரிணாமம் அடைந்தன என புரியும். ஏனெனில், ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்தவர்களின் மனநிலைக்கு தக்கவாறும், அந்தந்த கலாச்சாரத்திற்கு தக்கவாறும்- மேலும் வெவ்வேறு காலகட்டத்திலும் இந்த மாற்றங்கள் படிப்படியாக செய்யப்பட்டுள்ளன.
இரண்டு, தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலிருந்தும் ஏராளமான சொற்கள் ஆங்கிலத்திற்கு இடம்பெயர்ந்துள்ளன. உதாரணமாக, பாதை என்ற சொல்லில் இருந்து, பாத் (வழி) என்ற ஆங்கில சொல்லும், தேதி என்ற சொல்லில் இருந்து டேட் என்ற ஆங்கில சொல்லும், அரிசி என்ற சொல்லில் இருந்து ரைஸ் ( ரிசி - ரைஸ், ஸ்பெல்லிங்கை கவனிக்கவும்), நோட்டம் என்ற சொல்லில் இருந்து நோட் ( பொருள்: கவனித்தல்) என்ற ஆங்கில சொல்லும், உருண்டை என்ற சொல்லில் இருந்து , ரவுண்டு என்ற ஆங்கில சொல்லும் உருமாறி இடம்பெயர்ந்துள்ளன. தமிழ் சமஸ்கிருதம் இரண்டு மொழிகளுக்கே இப்படி என்றால் , உலகில் செம்மொழிகள் மொத்தம் ஐந்தோ, ஏழோ உள்ளன.
செம்மொழிகளில் மட்டும் இருந்து ஏராளமான சொற்களை கடன் வாங்கி ஆங்கிலமொழி தன்னை உருவாக்கிக்கொண்டுள்ளது என யூகித்தோம்.
மூன்று, எந்த ஒரு மொழியும் சாஸ்வதம் இல்லை. காலநதியில் மாறிக்கொண்டே இருக்கிறது. இன்றைக்கு இருக்கிற எழுத்து / பேச்சு வடிவம் போல ஐநூறு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அப்படியே இல்லை. இன்றுள்ள எழுத்து / பேச்சு வடிவம் ஐநூறு, ஆயிரம் வருடங்கள் கழித்து அப்படியே இருக்க போவதில்லை. அந்தந்த காலகட்டத்திற்கு உரிய சமூக, பொருளாதார, கலாசார, உளவியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எந்த ஒரு மொழியும் உருமாற்றம் பெற்றுக்கொண்டே வருகிறது. இன்னும் சில்லாயிரம் வருடங்களுக்கு பிறகு,
உலகிலுள்ள அனைத்து மொழிகளும் ஒன்றாகி, உருகி இணைந்து, ஒரே மொழியாகவே காட்சியளிக்கும் என்பதே என் யூகம்.
இதுவரை கூறப்பட்டுள்ள கருத்துக்களெல்லாம் முற்றிலும் உண்மை என கூறி விட முடியாது. நீண்ட ஆராய்ச்சிக்கு பின்தான் உண்மை தெரியவரும்; ஏற்றுக்கொள்ளவும்படும். இவ்வாறு மொழியியலில் ஆராய்ச்சிக்கு நிறைய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.
மிக நல்ல ஆராய்ச்சி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி லிங்கேஸ் இவ்வளவு வேகமாக எழுதுவீர்கள் என நான் எதிர் பார்க்கல வாழ்க உங்க மொழிப்பற்று.
ReplyDeleteதங்கள் புளோக்கர் செட்டிங்கில் Word verification எடுத்துவிட்டால் கொமண்ட் போட சுலபமாக இருக்கும் சகோதரா..
Nandri S.K..
ReplyDeleteNandri Sutha..
ReplyDelete