இயேசுநாதரின் 'நான் கடவுள்' !


தூய உள்ளத்தோர் பேறு பெற்றோர் ஏனெனில்
அவர்கள் இறைவனை காண்பர்.

நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை
உன்னை கைவிடுவதுமில்லை.

பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன்
திகையாதே நான் உன் தேவன்.

பைபிளில் காணப்படும் இந்த புகழ்பெற்ற வாசகங்கள் பெரும்பாலும் அனைத்து சர்ச்சுகளிலும், கிறிஸ்தவ பள்ளி சுவர்களிலும் எழுதப்பட்டிருக்கும். சில வருடங்கள் முன்பு எனது அத்தைப்பெண் ஒரு கலைக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். அக்கல்லூரி அருகில் ஒரு சர்ச்சு இருந்தது. அங்கும் மேற்கண்ட வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. சிலசமயங்களில், நான் அந்த கலைக்கல்லூரி அருகே நீண்டநேரம் காத்திருக்க நேரிடும். எனவே அந்த மூன்று வாக்கியங்களும் மனப்பாடமே ஆகியிருந்தன. ஆனால் ஒருபோதும், உன்னதமான அவ்வாக்கியங்களின் அர்த்தத்தை நான் யோசித்ததே இல்லை.

பின்பு சிலவருடங்களில், வேதாத்திரி மகரிஷி அவர்களின் 'பிரம்ம ஞான தத்துவத்தை' ஆழ்ந்து படிக்கும் வாய்ப்புகிட்டியது. அப்போதுதான், பைபிளில் காணப்படும் புகழ்பெற்ற அந்த வாசகங்களின் உண்மையான பொருள் எனக்கு விளங்கியது. அவைகளின் பொருள் இதுதான்:
பொதுவாக மனிதன் சிந்திக்கிறான்; செயல்புரிகிறான்; அனுபவங்களை பெறுகிறான். சிந்திக்காமலும் செயல்புரிகிறான்; அனுபவங்களை பெறுகிறான். மனிதன் அடையும் அத்தனை அனுபவங்களும் அவன் மனதை ஒரு போர்வைபோல் மூடிக்கொள்கின்றன. பெரும்பாலான மனிதர்களின் சிந்தனை ஓட்டங்களில் சுயநலம், பேராசை, காமவெறி, பிறரை தாழ்வாக மதித்தல், பிறர் மனம் புண்படும்படி பேசுதல், பொறாமை, அதிகார மமதை, அடுத்தவர் உழைப்பு/பணத்தை சுரண்டுதல் போன்ற முரணான எண்ணங்களே காணப்படுகின்றன. மனிதமனமே அழுக்கடைந்து, இருண்ட குகை போலத்தான் காட்சியளிக்கிறது.
இந்த மனமாசுக்கள் எப்போதுமே உண்மையை உணரவிடாமல் தடுக்கின்றன. மாசுக்கலானது, படிப்படியாக நீங்கி, உள்ளம் முழுத்தூய்மை பெறும்போது மனதின் அடித்தளமாக விளங்கும் இறைதரிசனம் மனிதனுக்கு உள்ளுணர்வாக கிட்டுகிறது. எல்லையற்ற மெய்ப்பொருளின் ஒரு துளியாகவே மனிதன் தன்னை உணர்ந்துகொள்கிறான். எனவே இறைவன் மனிதனை விட்டு விலகுவதுமில்லை; கைவிடுவதுமில்லை. உள்ளத்தூயமையே
இங்கு முக்கியம். உள்ளம் சுத்தமானால், செயல்களும் சுத்தமாகி விடும் அல்லவா? சுருங்க கூறுமிடத்து, தூய உள்ளம் பெற்றவன் , இறைவனை தனது உள்ளத்திலேயே தரிசிப்பான் என்பது பொருள்.
திருவள்ளுவரின்,
ஐயப் படாது அகத்தது உணர்வானை
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.
என்ற திருக்குறள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.





Comments

  1. ஆம் சகோதரா யேசு நாதர் போதனைகளை ஆழமாகப் பார்த்தால் மனம் தெளிவு பெறும். சிலர் மதம் என்ற போர்வையை போர்த்திக் கொண்ட பார்த்தால் சாம்பிராணி கூட புகை மூட்டம் போல் தானே இருக்கும்.

    ReplyDelete
  2. பொதுவாக மனிதன் சிந்திக்கிறான்; செயல்புரிகிறான்; அனுபவங்களை பெறுகிறான். சிந்திக்காமலும் செயல்புரிகிறான்; அனுபவங்களை பெறுகிறான். மனிதன் அடையும் அத்தனை அனுபவங்களும் அவன் மனதை ஒரு போர்வைபோல் மூடிக்கொள்கின்றன. பெரும்பாலான மனிதர்களின் சிந்தனை ஓட்டங்களில் சுயநலம், பேராசை, காமவெறி, பிறரை தாழ்வாக மதித்தல், பிறர் மனம் புண்படும்படி பேசுதல், பொறாமை, அதிகார மமதை, அடுத்தவர் உழைப்பு/பணத்தை சுரண்டுதல் போன்ற முரணான எண்ணங்களே காணப்படுகின்றன. மனிதமனமே அழுக்கடைந்து, இருண்ட குகை போலத்தான் காட்சியளிக்கிறது.
    இந்த மனமாசுக்கள் எப்போதுமே உண்மையை உணரவிடாமல் தடுக்கின்றன.


    .....well-said.... That is absolutely true.

    ReplyDelete
  3. Thanks for visit and comments Mrs.Chitra..

    ReplyDelete

Post a Comment