சித்தர்களா பித்தர்களா ?

சித்தர்கள் பொதுவாக பித்தர்கள் என்றே மக்களால் கருதப்படுகின்றனர் . ஏதோ தாடி வளர்த்து கொண்டு ,பரதேசிபோல் உடை அணிந்து அலைபவர்கள் ,நோய்களுக்கு வைத்தியம் செய்பவர்கள் என நினைக்கப்படுகின்றனர் . ஆனால் உண்மை அதுவல்ல . சித்தர்கள் கீழ்க்கண்ட துறைகளில் ஆழ்ந்த அறிவும் ,மேதைமையும் பெற்றிருந்தனர். சித்தர்களின் ஆற்றலும் அறிவும் திகைப்பூட்டுபவை. பிரமிப்பில் ஆழ்த்துபவை. அவை பின்வருமாறு:

மருத்துவம் - அதாவது உடற்கூறு ,நோய்கள் மற்றும் என்ன நோய்க்கு என்ன மூலிகை என்ற விவரங்கள்.

வானசாஸ்திரம் - கோள்களின் சஞ்சாரம், அமைப்பு அதனால் மனிதனுக்கு ஏற்படும் உடல் , மன ரீதியான மாற்றங்கள் மற்றும் நோய்கள்.

ரசவாதம் - ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்றுதல். இதை மெட்டலர்ஜி என்று சொல்லலாம் அல்லவா?

உளவியல் - சித்தர்கள் மனித மனதை பற்றி மிகவும் ஆழ்ந்து ஆராய்ந்ததோடு மட்டும் அல்லாமல், நுட்மான உளவியல் உண்மைகளை அறிந்திருந்தனர் என்று கூறலாம். சித்தர்களின் மனோதத்துவ அறிவு பிரமிக்கத்தக்கது.

சமூக சீர்திருத்தம் - மூட நம்பிக்கைகளை சாடினார்கள். இறைவனோடு ஒன்றி இறைவழியில் நடக்க வலியுறுத்தினார்கள்.

மேலும் திருவள்ளுவர், போகர் போன்ற சித்தர்கள் கூறியுள்ள - அரசியல், பொருளாதாரம், இல்வாழ்க்கை , அறவுரைகள் மற்றும் காதல் கலை போன்றவற்றை பற்றி உரைத்துள்ள கருத்துக்கள் அரியவை, தேடக்கிடைக்காதவை. இன்றைய உலகிற்கு மிகவும் அவசியமானவை.

சிவவாக்கியர், தாயுமானவர், திருமூலர், ராமலிங்கர், தேரையர் மற்றும் வள்ளுவர் போன்றோரின் கவிகளை படித்து பாருங்கள். நான் சொல்வது எந்த அளவு உண்மை என புரியும்.

என் சிறிய அறிவுக்கு எட்டியவரை ,சித்தர்களை விஞ்ஞானிகள் என கூறலாம். அதற்கு மேலும் கூறலாம், வார்த்தை கிடைக்கவில்லை.


Comments

  1. உண்மைதான்...நல்ல தொகுப்பு!

    ReplyDelete
  2. ஈனப்பிறவிகளான மானிடப்பிறவிகளுக்கு சித்தர்களின் மகா அறிவியல் செயல்கள் புரியாததால் அவர்கள் சொல்வதை பைத்தியக்காரத்தனம் என நினைத்திருக்கலாம்.. அல்லது.. சித்தர்கள் அதிகப்படியாக நேரங்களில் சிறு குழந்தை போன்ற விளையட்டுத்தனங்களில் ஈடுபடுவதால் அவர்களை பித்தர்களாக சித்தரிதிருக்கலாம்.. ஆனால் 9 கிரகங்களைப்பற்றியும் அதன் நிறை,சுற்றளவு,நிறம் முதலியவற்றை இன்றைய பித்தர்கள்(மனிதர்கள்) இராக்கெட் விட்டு கண்டறிவதற்கு முன்பே கூறிச்சென்றவர்கள் அவர்கள்..

    ReplyDelete

Post a Comment